தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதி நடத்தும் பெண்ணிடம் முன்னாள் எம்.பியின் கணவர் பெண்ணை உல்லாசத்திற்கு அனுப்பும் படி கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா என்பவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 12 ஆண்டுகளாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் வாசு மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், விடுதியில் இருக்கும் பெண்களில் உல்லாசமாக இருக்க

ஒரு பெண்ணை அனுப்பும்படி வாசு மிரட்டுவதாக தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார் மேலும் இது குறித்து முன்னாள் எம்.பி.யின் கணவர் வாசு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் அதனை வாங்க மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கும், தனது விடுதிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பலர் செயல்படுவதாக கூறும் அவர்,

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் இல்லாத காரணத்தினால் தான்
புகார் வாங்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து சத்தியபாவின் கணவர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
