கவினை அடித்துவிட்டு லாஸ்லியாவிற்கு அறிவுறை கூறிய கவின் நண்பர்..! நீக்கப்பட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் freeze டாஸ்க் நடைபெற்றது. அதில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு நன்றாக விளையாடும்படி ஊக்கம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அந்த வகையில், இலங்கைப் பெண் லாஸ்லியாவின் தந்தை, தாய் மற்றும் அவரது தங்கை வந்திருந்தனர். அப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் நடவடிக்கையைப் பார்த்தும் மிகவும் கோபபட்டு கடுமையான முறையில் லாஸ்லியாவை திட்டினார்.

இதைத்தொடர்ந்து, கவினின் நண்பர் பீட்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவரும் கவினை மிகவும் கடுமையான முறையில் திட்டியதோடு, அவரை கன்னத்தில் அடிக்கவும் செய்தார். பின்னர், நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடாத unseen வீடியோவில் கவினை அறைந்து விட்டு லாஸ்லியாவிடம் பேசியுள்ளார் கவின் நண்பர் பீட்டர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள பீட்டர், கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது. ஆனால், அவர் மிகவும் நல்லவர், எனக்கும் அம்மா மாதிரி தான்,

இவன் செய்யும் சில வேலையால், அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள், அது இவனால் தான், அதற்காக தான் அடித்தேன் என்றும் கூறியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ