‘கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன்’ !! விருது விழா மேடையில் கூறிய யோகி பாபு !! வைரலாகும் வீடியோ !!

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் யோகிபாபு.சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்துவந்த யோகிபாபு தற்போது முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் முதல் காமெடியனாக நடித்துவருகிறார். யோகிபாபுவின் வளர்ச்சி மிகவும் பெரியது.தற்போதைய தமிழ் சினிமாவில் யோகிபாபு இல்லாமல் ஒரு திரைப்படம் வெளிவருவதே பெரிய அதிசயமாக உள்ளது.தற்போது 19 படங்களுக்கு மேலாக கையில் வைத்திருக்கும் யோகிபாபு ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

தற்போது யோகிபாபுவிற்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெரிய பங்களா கட்டியுள்ளார்.
அந்த பங்களாவுக்கு தனது அம்மா விசாலாட்சியின் பெயரை வைத்துள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்தநிலையில் தற்போது ஜீ தமிழ் சார்பில் 2019க்கான சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது.இதில் கமல்ஹாசன் ஷங்கர் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த காமெடியன் விருது கோமாளி திரைப்படத்தில் நடித்ததர்காக யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டது.மேடையில் பேசிய யோகிபாபுவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பொண்ணுங்கள நான் பாக்குறேன் பொண்ணுங்கதான் என்னய பார்க்க மட்டது என கூறினார்.மேலும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்ததாகி பற்றி கேட்டபோது கட்டுனா அந்த பொண்ணைத்தான் கட்டுவேன் அந்தப்பொண்ணு யார் தெரியுமா ?? நீங்கதான் என நயன்தாராவை பாரத்து கூறினார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.