காட்டிற்குள் நடைபயிற்சி சென்ற பெண் அதிகாரி..!! கணவர் கண்முன்னே யானை மிதித்த பரிதாபம்..!! கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம்..!!

கோவை மாவட்டத்தில் அனைவரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக இருக்கும் நிலையில், இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்துள்ளது.இதனால் வனத்துறையினர் காட்டிற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்த புவனேஸ்வரி என்பவர், தனது கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்களுடன் பாலமலை வனப்பகுதிக்குள் நடைப்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார்.அப்போது காட்டிற்குள் திடீரென்று அங்கு வந்த காட்டுயானை ஒன்று அவர்களை துரத்தியதையடுத்து, அனைவரும் உயிரைக் காப்பாற்ற ஓடியுள்ளனர்.

இதில் புவனேஷ்வரியால் மட்டும் ஓட முடியாமல் போனதால் காட்டு யானையிடம் சிக்கியுள்ளார்.யானையிடமிருந்து அவரைக் காப்பாற்ற கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போயுள்ளது.  காட்டுயானை துதிக்கையால் புவனேஸ்வரியை தூக்கிவீசியது மட்டுமல்லாமல், காலால் மிதித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் அவருடன் சென்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.