பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வனிதா இரண்டாவது போட்டியாளராக நிகழ்ச்சயில் வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேறியது பலருக்கு சந்தோசம் தான் என்றாலும், அவர் இல்லாமல் போனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரண்டு விவாகரத்திற்கு பின்னர்

பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பே வனிதாவை குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து விடடனர். இந்த நிலையில் வனிதாவின் சகோதரரான நடிகர் அருண் விஜய் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில்

தனது சகோதரிகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த கண்ட பலரும் இந்த புகைப்படத்தை வனிதா எங்கே என்று கமன்ட் செய்து வந்தனர். இதனால் இந்த புகைப்படத்திற்கு ரீ-ட்வீட் செய்துள்ள வனிதா, இந்த புகைப்படத்திற்கு கீழ் என்னை பற்றி கேட்ட அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Thanks to all my tweeple family members for enquiring about me in the comments. it means a lot to me that atleast you remember me? https://t.co/zVdYvChnyC
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 27, 2019