குருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.! அள்ளித்தரும் கோடிகள்

குரு பார்க்க கோடி நன்மை என்கின்றனர்.பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரே பிருகஸ்பதி என்னும் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம்.குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒருவருட காலம் கொள்கிறார். அவர் எந்த ராசியில் குடிகொண்டுள்ளாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே ஜோதிடத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.இந்த காலகட்டத்தில் குரு பகவான் நம்மைப் பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.

பலனடையும் இராசிகள்
குரு பகவான் அடுத்த அக்டோபர் மாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். அப்போது, அவர் சென்று அமரும் ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் முதலே நல்ல பலன்களை அளிக்கிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது.இதில், ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிகளுமே செழிப்பான பலன்களை பெறவுள்ளன.

உச்சகட்ட பலன்
இந்த குருப் பெயர்ச்சியின் போது மிதுனம் ராசிக்காரர்களுக்கு 6-வது வீட்டில் குரு அமர்கிறார்.எனவே, குரு பகவானின் பார்வை விழும் 2-ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு இடமாகும். 10ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும். இப்பெயர்ச்சி காலத்திலேயே தொழிலில் முன்னேற்றம், வாகன யோகம், புது வீடுகள் கட்டும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன.

மிதுன ராசி
குருபகவான் தனது 5ம் பார்வையால் மிதுன ராசியின் 10ம் வீட்டைப் காண்பதால் இடையில் நின்ற வேலைகல் மீண்டும் புதுப் பொழிவுடன் துவங்ப்படும். புதிய வேலையும், செய்யும் வேலையில் முன்னேற்றமும் உண்டாகும்.

பரிகார ராசிகள்


இந்த ஆண்டில் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்கிறார். இதனால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வர சுப காரியங்கள் அரங்கேறும்.குறிப்பாக, குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் மாலையும் சாற்றி வழிபட நன்மை உண்டாகும்.