நாம் அன்றாடம் பல விதமான சம்பவங்களை கேள்வி படு கிறோம். தற்போது மிகவும் மோசமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.. பெங்களூருவைச் சேர்ந்த 33 வயதாகும் இளம்பெண் ஒருவர், பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் சிலர் ஒன்று சேர்ந்துகொண்டு, தன்னை தவறாக சொல்கிறாரகள் . அத்துடன், ”நான் அழகாக இருப்பதால், என்னை அந்த தொழில் செய்யும்படி அவர்கள்
சொல்கிறாரகள் . இப்படி செய்யவில்லை எனில், எனது குழந்தையை ஏதாவது செய்து விடுவோம் என்றும் சொல்கிறாரகள் என அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்டமாக, அந்த நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரை உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குடும்பத்தை பிரி ந்து, மகனுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண் என்பதால், அவருக்கு அந்த கும்பல் இப்படி செய்திருக்கலாம் என்று, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.