கொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை!

சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் பலியாக நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.பிரான்ஸை சேர்ந்த தி ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோ ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (The Organisation for Economic Co-operation and Development -OECD) அமைப்பு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2050ல் உலகம் மிகப்பெரிய நோய் தாக்குதலை சந்திக்கும், அப்போது பல மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று கூறியது.முக்கியமாக ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

என்ன வைரஸ்கள்
சூப்பர்பக் என்று இந்த வைரஸை அழைக்கிறார்கள். இதன் உண்மையான பெயர் விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் இது ஒரு தனித்த வைரஸ் கிடையாது , பல வைரஸ்களின் தொகுப்பு என்றும் கூறுகிறார்கள். இந்த வைரஸ்கள்தான் 2050ல் மக்களை கொத்து கொத்தாக கொல்ல போகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வைரஸ் கிருமிகள் தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு அழியும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று வருகிறது. விரைவில் இந்த நோய் கிருமிகள் முழுக்க முழுக்க மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெறும். 2050ல் இந்த சூப்பர்பக்ஸ் முழு மருந்து எதிர்ப்பு திறனை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

என்ன சக்தி உள்ளது
அப்படி நடக்கும்பட்சத்தில், எந்த விதமான மருந்துகள் கொடுத்தும் நோய்களை தீர்க்க முடியாது. அதன்பின் இப்போது இருக்கும் நோய்களை குணப்படுத்தவே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது பல மில்லியன் மக்களை சாதாரண நோய்க்கே பலியாக வைக்கும் என்றுள்ளனர்.

எப்படி தடுப்பது
இப்போதில் இருந்தே இதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐரோப்பாவில் இப்போதே சில கிருமிகள் கடுமையான நோய் எதிர்ப்பு சக்திகளை பெற்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவைகளை இப்போதே அழிக்கும் அளவிற்கு மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.