பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த செந்திலும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்து கொ ண்ட னர்.விஜய் டிவியில் யார் ஜோடியாக நடித்தாலும் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கல்யாணம் வரை செல்வது வழக்கம்.

அந்த கல்யாண விழா முதல் வளைகாப்பு விழா வரை அந்த தொலைக்காட்சியே நடத்தி அதை ஒரு ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பி விடுவார்கள்..இந்த மாதுரி பலமுறை விஜய் தொலைகாட்சியில் நடந்துள்ளது.. அப்படி இந்த தொலைகாட்சியில் ஒரே நாடகத்தில் ஜோடியாக நடித்து திருமணம் செய்தவர்களில் ஒருவர் தான் செந்தில் மற்றும் மீனாட்சி. இந்த அழகிய காதல் ஜோடியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, அவர்களின் காதல் வாழ்க்கை இது போல என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்து ஷேர் செய்தும் வருகின்றனர்.