சுர்ஜித் குடும்பத்தாருக்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க ஸ்டாலின்! கொடுத்த தொகை எவ்வளவு?

சுர்ஜித்தின் குடும்பத்தாரிடம் திமுக சார்பில் ரூ 10 லட்சத்துக்கான காசோலையை மு.க ஸ்டாலின் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் அங்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின், குழந்தை சுர்ஜித்தின் கல்லறைக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், குழந்தையின் பெற்றோர் பிரிட்டோ, கலாமேரியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் திமுக சார்பில் சுர்ஜித்தின் குடும்பத்தாருக்கு முதல் ஆளாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் அரசு மெத்தனம் காட்டியது. 36 அடியில் இருந்தபோதே குழந்தை சுஜித்தை காப்பாற்றி இருக்க முடியும். சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என கேள்வியெழுப்பிய ஸ்டாலின் பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.