“சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா”..! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா..??

தற்போது உலகம் முழுதும் நடக்கும் இன்னல்கள் என்ன வென்று நமக்கு நன்கு தெரியும். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதில் குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது நமக்கு தெரியும். மக்கள் அனைவரும் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும்,  தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஐ கடந்துள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இந்நிலையில் சென்னையில் 285பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் 108, கடலூர் 26, மற்றும் சேலத்தில் 24, திருவாரூரில் 26, விருதுநகர் 19, திருவண்ணாமலை 12, தஞ்சாவூர் 46, நாகப்பட்டினம் 43, திருப்பத்தூர் 17 உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அதனை தொடர்ந்து ,  கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 9பேருக்கும், சிவகங்கை 11மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 22, கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் 10 பேருக்கும், அரியலூர் 2 மற்றும் பெரம்பலூரில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த தடை உத்தரவு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தான் தெரிகிறது.