சென்னை தியாகராய பகுதியில் சஞ்சனா என்ற 28 வயது பெண் வசித்து வருகிறார் இவர் அங்கு உள்ள மாணவ-மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார், இவரிடம் தொடர்ச்சியாக டியூஷன் படித்து வந்த பெண் ஒருவர் வீட்டிற்கு சோர்வாக வந்துள்ளார், அவர் கூறிய காரணம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டிற்கு சோர்வான வந்த பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளார், அப்பொழுது அந்த மாணவி அழுதுகொண்டே தனக்கே டியூஷன் எடுத்த ஆசிரியர் தன்னை வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்க வைத்ததாக கூறியுள்ளார், மேலும் இருவரையும் ஒன்றாக வைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அந்த பெற்றோர்கள் பதறிப்போய் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சஞ்சனா மற்றும் பாலாஜி என்பவரைக் கைது செய்தார்கள் உடனடியாக, மேலும் அவர்கள் இருவரிடமும் இருந்த செல்போனை பறிமுதல் செய்தபோது அதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இருந்துள்ளன. அவர்கள் இவ்வாறு வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்காகவே தனி அறையை வைத்துள்ளார்கள் அந்த அறையில் அழகாக இருக்கும் மாணவ மாணவிகளை பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

பின்பு அந்தப் புகைப்படங்களைக் காண்பித்து அந்த மாணவ மாணவிகளை மிரட்டி பாலாஜி என்பவர் தவறாக நடக்க வைத்துள்ளனர். அதற்க்கு மறுக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்து உள்ளார்கள். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள்.இந்த சம்பவம் தியாகராயநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னையில் உள்ள மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.