இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத், அதன்பிறகு 4 ஸ்டூடன்ட்ஸ், எம்.மகன், பட்டியல், வெயில், பழனி என பல படங்களில் நடித்திருந்தாலும் சில மட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது. நடனத்தில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பதால் அதில் கவனம் செலுத்திய நடிகர் பரத் அவ்வப்போது படங்களில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

திருமணமான பிறகு சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து மீண்டும் பொட்டு, சிம்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகர்களிலேயே பரத் தான் இரட்டை குழந்தையை பெற்றவர்.கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், பரத் அவரின் அழகிய குழந்தைகளுடன் இருக்கும்

புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லக்குகளை குவித்து வருகின்றனர். நடிகர் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஜெஸ்லி ஒரு பல்மருத்துவர் என்பதும் குறிப்படத்தக்கது.
