செமி ஸ்லீவ் உடை, கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் !! படு மாடர்ன் அவதாரத்தில் ஆளே மாறிய ரித்விகா !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.


பிக் பாஸ்’ மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ரித்விகா அறிமுகமான ‘பரதேசி’ படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தார். தொடர்ந்து, ‘நினைத்தது யாரோ’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, சமீபத்தில் வெளியான, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றினார்.
சமீபத்தில் அவரிடம், உங்களுக்கு எந்த நடிகர் மீதாவது ஈர்ப்பு இருக்கிறதா?’ என்றபோது பட்டென, ‘ஆமாம் விஜய்சேதுபதி மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது.


அதேபோல் ஜெய்சங்கர் மீதும் ஈர்ப்பு இருந்தது’ என்றார். ரித்விகாவின் இந்த ஈர்ப்பு கமென்ட் நெட்டிஸன்கள் மத்தியில் பெரிதாக பற்றிக்கொள்ளவில்லை. விஜய்சேதுபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஜெய்சங்கர் மறைந்துவிட்டார். இந்தநிலையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரித்விகா எந்தப்படங்களிலும் கவர்ச்சி காட்டுவதில்லை.இந்தநிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் ஒரு ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.