தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் யோகிபாபு.சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்துவந்த யோகிபாபு தற்போது முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் முதல் காமெடியனாக நடித்துவருகிறார். யோகிபாபுவின் வளர்ச்சி மிகவும் பெரியது.தற்போதைய தமிழ் சினிமாவில் யோகிபாபு இல்லாமல் ஒரு திரைப்படம் வெளிவருவதே பெரிய அதிசயமாக உள்ளது.

மேடையில் பேசிய யோகிபாபுவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தநிலையில் தற்போது யோகிபாபுவிற்கு திருமணம் நடப்பது உறுதியாகியுளளது. திருமணம் செய்ய போகும் பெண்ணின் பெயர் “பார்கவி”. இது காதல் கல்யாணம் இல்லை, வீட்டில் பெற்றோர்கள் பார்த்த பெண் சாதாரண குடும்பத்தை சார்ந்த பெண். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளும் குணம் உள்ளவராக தேடினேன் கிடைத்துவிட்டார் என்று கூறிஇருந்தார்.

இந்த நேரத்தில் பார்வதி என்னும் பெண்ணை திருமணம் செய்ய போகும் யோகி பாபுவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை , திடீரென்று அவரை வேண்டாம் என்று உதறிவிட்டு அதே தேதியில் ,அதே இடத்தில் தற்போது வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட போகிறாராம்.பெண்ணின் பெயர் மஞ்சுவாம், அவரின் அப்பா பெயர் பெருமாள். சாதாரண குடும்பத்து பெண் யோகி பாபுவுக்கு ஏற்ற நகைச்சுவை உணர்வு உள்ள அதே சமயம் சினிமாவுக்கும் அந்த பெண்ணிற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணாம்.இதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.