சென்னையில் உள்ள வடபழனி பேருந்து பணிமனையில் ஏற்பட்ட விபத்தினால் திருமணமாகி 24 நாட்களிலேயே பெண்னொருவர் கணவனை இழந்த சம்பவமானது அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் வடபழனி பணிமனை இயங்கி வருகிறது. இந்த நேற்றிரவு எதிர்பாராவிதமாக விபத்தொன்று ஏற்பட்டது. அதாவது அப்பகுதியில் ஊழியர்கள் வழக்கம் போன்று பணி செய்து கொண்டிருந்தனர். சோதனைக்குட்பட்ட பேருந்து ஒன்றானது கட்டுப்பாட்டை இழந்து சென்றுவிட்டது. அப்போது அப்பகுதியில் இருந்த சுவற்றின் மீது பலமாக மோதியது. தகவலானது உடனடியாக தீயணைப்பு வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. சுவற்றின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 8 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சேகர் மற்றும் பாரதி என்ற 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மாபெரும் துக்கம் என்னவென்றால் விபத்தில் சிக்கி உயிரிழந்த பாரதிக்கு ஒரு மாதம் முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. 4-ஆம் தேதியன்று நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் போக்குவரத்து ஓட்டுநரான பாரதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. விபத்து குறித்து கண்கலங்கி நாகேஸ்வரி கூறுகையில்,

திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே பணிக்கு திரும்பிய என் கணவருக்கு இவ்வாறு நிகழ்ந்து விட்டதே” என்று கூறியுள்ளார். பாரதியின் தங்கையான பச்சையம்மாள் கூறுகையில், “இறந்த பின்னர் தரும் இழப்பீடுகளும்,
அனுதாபங்களும் உயிரிழந்தவரை திரும்ப தர இயலாது” என்று கூறியுள்ளார். திருமண வாழ்வு தொடங்கும் முன்னரே நாகேஸ்வரியின் வாழ்க்கை இவ்வாறு முடிந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
