நாமினேஷனில் பிக்பாஸ் வைத்த ஆப்பு… கவின் மீது விஷத்தை பாய்ச்சிய சாக்ஷி! நாமினேட் செய்யப்பட்ட லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் 4வது இடத்தில் இருந்த மது வெறும் 24 மணி நேரத்தில் கடைசி இடத்திற்கு சென்றதாக நேற்று கமல் கூறியுள்ளார். அவர் கூறும் நேரம் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று மீரா குற்றம் சாட்டிய தருணமே அது… பிக்பாஸில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஓபன் நாமினேஷன் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். லொஸ்லியா மதுமிதாவையும், சாக்ஷியையும் மிக தைரியமாக வந்து நாமினேட் செய்துள்ளார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோ காட்சியில் கவினை சாக்ஷி நாமினேஷன் செய்துள்ளார். இது பிக்பாஸ் வீட்டில் பயங்கர அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இதுவரை நாமினேட் ஆகாத ரேஷ்மாவை தர்ஷன், முகேன் நாமினேட் செய்கின்றனர். ஷெரின் நம்ம ஈழத்து பெண் லொஸ்லியாவை நாமினேட் செய்துள்ளது லொஸ்லியா ஆர்மி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.