தேசிய சாதனை படைத்த வேதாந்த்…. மகனின் வெற்றியை பகிர்ந்த நடிகர் மாதவன்…. வைரலாகும் வீடியோ இதோ..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். அவரின் மகன் வேதந்த் நீச்சல் போட்டியில் தற்போது சாதனை படைத்துள்ளார். ராக்கெட்டரி படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் மாதவனுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

புவனேஸ்வரி நடைபெறும் 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். கலிங்க அரங்கத்தில் நடந்த இந்த போட்டியில் 1500 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் 16:01,73 வினாடிகளில் தூரத்தை கடந்து வேதாந்த் தங்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன் இருந்த சாதனையை முறியடித்து தற்போது தேசிய சாதனை படைத்துள்ளார். அவரின் வெற்றியை மாதவன் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மாதவனின் மகனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.