சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை 2014ல் திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் நடிகை அமலாபால். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் சட்ட முறைப்படி கடந்த 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் அமலாபால் தீவிரமாக சினிமாவ் நடித்துவந்த நிலையில் இவரது நடிப்பில் விரைவில் ஆடை படம் வெளியாகவுள்ளது.
விஜய் நடிகை அமலா பாலை திருமணம் செய்து விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் அமலா பால் தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் விஜய் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இவர் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 11 ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. அவரது புகைப்படம் இதோ
