விஜய் டிவியியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3 சீசன் கோலகலமாக துவங்கவுள்ளது. நாளை முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் யார் கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் படி பிக்பாஸ் 3-யில் சரவணன் மீனாட்சி கவீன், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தோம். இதையடுத்து தற்போது கலந்து கொள்ளும் 17 பேரின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் திரைப்பிரபலங்களுக்கு மட்டுமின்றி மாடல்களுக்கும் விஜய் டிவி வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
இந்த சீசனில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு தொடங்கி, நடிகர் சேரன்,பவர் ஸ்டார் பருத்திவீரன் புகழ் நடிகர் சரவணன், நடிகை ஷெரின், நடிகை மதுமிதா, சாந்தினி , டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மோகன் வைத்தியா , நடிகை அபிராமா, இரண்டு விளம்பர மாடல் என 17 பேர் உள்ளே சென்றுள்ளனர். இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்க