தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும் , நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ் சீரியல்களில் தற்போது ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சித்ரா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்னும் பாத்திரத்தில் நடித்து பட்டி, தொட்டியெங்கும் பிரபலம் ஆகிவிட்டார். ஆனால் இவரின் ஆரம்பகாலம் மிகவும் வலியும், சோகமும் நிறைந்தது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் விஜய் டிவிக்கு கிடைக்கும் trpக்கு முக்கிய காரணம் இதில் ஜோடியாக நடிக்கும் கதிர் மற்றும் முல்லைதான்.இவர்களின் காதல் காட்சிக்குதான் அமோக வரவேற்பு.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தற்போது தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இந்த வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பலர் என்னை இன்னும் தவறாகவே பேசுகிறார்கள். குறிப்பாக சில ரசிகர்கள் செய்யும் கமெண்டுகளை நானே காசுகொடுத்து போட சொல்வதாக சொல்கிறார்கள்.இது எனக்கு மிகவும் வேதனையை கொடுக்கிறது என கூறியுள்ளார்.இதில் எனக்கு பலரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.அதில் கவின் முக்கியமாக எனக்கு பல அட்வைஸ் கொடுத்தார். அவர்களுக்கு நன்றி எனக்கூறி மனம் நெகிழ்ந்துள்ளார்.