மெட்டி ஒலி சீரியல் புகழ் செல்வம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?? நீங்களே பாருங்க !!

தமிழ் ரசிகர்கள் பொறுத்தவரை வெள்ளித்திரை சினிமாவுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சின்னத்திரைக்கு கொடுப்பார்கள்.அது எந்தளவிற்கு என்றால் சின்னத்திரை நடிகர்கள் கூட அவர்களுக்கு பிடித்தமான நாயகர்களாக மாறுவார்கள். மேலும் அதுமூலம் பிரபலமான நபர்கள் நிறைய பேர் உள்ளனர்.இன்று உச்சத்தில் உள்ள சிவகார்த்திகேயன் கூட சின்னத்திரையில் இருந்து வந்தவர்தான். மேலும் தமிழில் மக்களால் ரசிக்கப்படும் பல சீரியல்கள் மற்றும் தொடர்கள் உள்ளனர்.அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறார்கள்.

குறிப்பாக குடும்பப்பெண்கள் சீரியல் அதிகமாக விரும்பி பார்ப்பதால் நாயகிகள் பெரும் புகழ் பெறுகிறார்கள். இந்தநிலையில் மக்கள் மத்தியில் பெரிது பேசப்பட்ட ஒரு சீரியல்தான் மெட்டி ஒலி.90களில் பிறந்தவர்கள் யாராலும் இந்த சீரியலை மறக்க முடியாது.நெடுந்தொடராக மைந்த இந்த கதை இன்று திரும்ப வெளியிட்டாலும் ஹிட்டடிக்கும். இந்த சீரியல் எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு இந்த சீரியலில் நடித்தவர்களும் பிரபலம்.குறிப்பாக அதில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்த விஷவாவை யாரும் மறந்திருக்க முடியாது.

தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் அவர். மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் பெரிதாக நடிக்காத விஷ்வா வெகுநாட்கள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் சீரியலில் நடித்தார்.பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காத விஷ்வா தற்போது சொந்தமாக ஒரு கம்பெனி நடத்தி வருகிறார்.