நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்கும் அப்பால் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். தமிழ் மொழியில் பல ஹிட்டான பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடிய போகாதே போகாதே பாடல் ரசிகர்களை இவருக்கு அள்ளித்தந்தது என்று சொல்லலாம். ரம்யா நம்பீசன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர்.

சயனம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் நடிகை ரம்யா. ஒரு நாள் ஒரு கனவு என்ற தமிழ் படத்தில் ஒரு சிறிய கத பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் இவர் நடித்துவிட்டார்.
மேலும் தமிழி இவர் நடித்த பிழ்ழா படம் இவருக்கு நிறைய ரசிகர் பட்டாளத்தை அல்லி தந்தது. இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் கவர்ச்சி காட்டியது இல்லை. படவாய்ப்புகள் குறைந்து விட்டால் பொதுவாகவே அடுத்து நடிகைகள் கவர்ச்சிக்கு இறங்கி விடுவார்கள்.

ஆனால், இவர் நடிப்பை மட்டும் நம்பாமல் திறமைகளையும் வளர்த்து வருகின்றார். அவரின் யூடியூப் சேனலில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யுள்ளார். நடிகை ரம்யா நம்பீசன் தற்போது சினிமாவையும் தாண்டி புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். இவர் சினிமாவையும் தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறியுள்ளனர்.
#RamyaNambessanEncore Launching tomorrow!! Stay tuned as we launch our first song tomorrow evening at 5 ♥️ #kuhuku pic.twitter.com/5eFLPdgdTN
— Ramya Nambessan (@nambessan_ramya) December 3, 2019