நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார். தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர்.
கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
ஆனால், இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகையை போல படு மாடர்னாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.