பள்ளியில் இருந்து சோர்வாக வீடு திரும்பிய சிறுமி! அழுதவாறு பெற்றோரிடம் கூறிய அதிர்ச்சி தகவல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்புத்துபட்டில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்த உடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனும், 8ம் வகுப்பு முடித்து மேற்படிப்பை தொடராத 13 வயது சிறுவனும் அங்கு வந்தனர்.

அவர்கள் 2 பேரும், சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளனர். மாலையில் வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டாள். இதனை பார்த்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அழுதவாறு நடந்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தாள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.