பிக்பாஸ் வனிதாவை கடைசி நேரத்தில் காப்பாற்றிய மகள்… போலீசாரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த வனிதா தனது மகள் ஜெனிதாவை கடத்தி வைத்துள்ளார் என அவரின் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலுங்கானா போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க ஆந்திர போலீசார் முன்னர் சென்னை வந்த போது வனிதா தலைமறைவானார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அவர் இருப்பதை அறிந்த தெலங்கானா போலீசார், தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியது. நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றார்கள்.

அங்கு அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது கடத்தப்பட்டதாக சொல்லப்படும் ஜெனிதா, எங்கு உள்ளார் என்பதை வனிதா பொலிசாரிடம் சொல்ல மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணிக்கு வனிதா மகளை நேரில் அழைத்து போலீசார் விசாரிக்கவுள்ளதாகவும், அப்போது மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா?

அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது வனிதாவின் மகள் நான்

அம்மாவுடனே இருக்கிறேன் என்று போலீசார் விசாரணையில் கூறியிருப்பதால், வனிதா கைதிலிருந்து தப்பியுள்ளார். அவர் சொன்னே அந்த வார்த்தை தான் இப்போது வனிதாவை பிக்பாஸ் வீட்டினுள் வைத்துள்ளது.