தமிழ்சினிமாவில் முன்னணி குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக இருந்தவர் மணிவண்ணன். இவர் கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், அமைதிப்படை போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனராகவும் இருந்தார். மணிவண்ணன் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார், மணிவண்ணின் மறைவை அவர் மனைவி செங்கமலத்தால் தாங்கவே முடியவில்லை. ஏனெனில் அவர் மணிவண்ணணுக்கு தாரமாகவும், தாயாகவும் இருந்தார், இதனால் கணவரை நினைத்து நினைத்து ஏங்கிய செங்கமலம் மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து உயிரிழந்தார்.
