பிரியும் நேரத்தில் உண்மையை கூறி அனைவர் மனதிலும் இடம்பிடித்த லொஸ்லியா! கண்ணீர் சிந்திய தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேற்றுப்பட்டுள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என எதிர்பார்க்கப்பட்ட சேரன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அப்போதே நிகழ்ச்சியின் மீதான பாதி நம்பிக்கை போயிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, தர்ஷன் பிக் பாஸில் இருந்து வெளியேறும் முன் லொஸ்லியாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அது மாத்திரம் இல்லை சிறப்பாக போட்டியில் விளையாடும்படியும் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியேற்றப்பட்ட சோகத்தினையும் மறந்து லொஸ்லியா வெற்றி பெற தைரியம் கூறிய காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, தர்ஷனை ஒரு தடவை கூட நாமினெட் செய்யாத லொஸ்லியாவின் குணம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதனை மேடையில் கூறும் போது தர்ஷன் கண்ணீர் சிந்துவார். மேலும், கவீன் கூட தனது நண்பர்களை இது வரை ஒரு தடவை கூட நாமினேட் செய்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து பேசிய தர்ஷன், இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இதை தாண்டினால் நான் ஊருக்கு தான் போக வேண்டும் என்று தான் நினைத்தேன்.

எனக்கு பிக் பாஸில் தான் மிகப்பெரிய அனுபவம். வனிதாவிடம் நான் சண்டை போட்டுள்ளேன் அவர் எனக்கு ஊட்டியும் விட்டுள்ளார். நான் பொதுவாக யாரிடமும் பேசவே மாட்டேன். ஆனால், உள்ளே சென்ற பின் கமல் சார் சொன்னதும் அனைவரிடமும் நன்றாக பழகினேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள். முகெனை பார்க்கும் போது நான் பட்ட கஷ்டத்தை பார்ப்பது போல தான் இருந்தது என்று உருக்கமாக பேசினார் தர்ஷன். அதன் பின்னர் போட்டியாளர்களிடம் பேசிய தர்ஷன், வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினார். ஒரு வாரம் கழித்து உங்களை நான் பார்க்கிறேன். வெற்றியோடு வாருங்கள் என்று பேசினார். மேலும், முகெனிடம் மச்சி நீ ஜெயிச்ச உன்னை விட சந்தோஷபடறவன் நான் தான்,

ஏன்னா எனக்குள் உன்னை பார்க்கிறேன். என்று வருத்தத்தை மறைத்துகொண்டே முகெனை சிரிக்க வைத்தார் தர்ஷன்.. கடைசியாக விடைபெற்ற தர்ஷனை மேடையின் கீழே இருந்த தர்ஷனின் ரசிகர்கள், கைகுலுக்குயும், கண்ணீர்விட்டும் அனுப்பி வைத்தனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தவொரு போட்டியாளர்கள் வெளியேற்றத்துக்கும் ரசிகர்கள் அழுததே கிடையாது. தர்ஷனின் வெளியேற்றத்தை தாங்க முடியாமல் அழுததே எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.