சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ‘சிந்து பாத்’ ‘கடைசி விவசாயி’, ‘சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் போன்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேத்துபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். ,மேலும் , இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த நானும் ரௌடி தான் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் மகன் சினிமாவில் நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதியின் மகளும் விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார். சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ‘சங்கத் தமிழன் ‘ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்திரன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக

இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். விஜயா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா ரஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸ் நடிக்க இருக்கின்றனர். இவர்கள்
இருவருக்கும் விஜய் சேதுபதியுடன் இது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு விவேக் மற்றும் மேர்வின் என்று இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்
