மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த்., பலபேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார். இந்நிலையில் மாகாபா ஆனந்த தற்போது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் மனைவி சுசன் ஜார்ஜ் பிறந்த நாளை ”ஹாப்பி பர்த்டே பேபி” என செல்லமாக செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.