முத்தம் கொடுக்கவந்த நபரின் நாக்கை கடித்த பெண்..!! என்ன காரணம் தெரியுமா? ராஜஸ்தானில் அரங்கேறிய வினோத சம்பவம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் வாடகைக்கு கார் ஒன்றை புக் செய்துள்ளார். இந்நிலையில் காரில் வந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த இரு நபர்கள் அப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. தனது நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று விழாவை முடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு செல்வதற்கு வாடகை கார் ஒன்றை புக் செய்துள்ள நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அப்பெண்ணின் இருப்பிடத்திற்கு கார் வந்தது அதில் டிரைவர் மற்றும் மேலும் இருவர் இருந்துள்ளனர்.

இதையடுத்து காரில் ஏறிய பின் சிறிது தூரம் சென்ற பிறகு அதிலிருந்த நபர்கள் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர். அப்போது அதிர்ச்சி அடைந்த அப்பெண் அவர்களிடம் தைரியமாக சண்டையிட்டுள்ளார். கார் ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவர் அப்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள மற்றொருவர் அப்பெண்ணிற்கு முத்தம் கொடுக்க வந்துள்ளார் அப்போது அந்தப் பெண் அவரது நாக்கை கடித்து துப்பியுள்ளார்.  

இந்நிலையில் வலியால் துடித்த அந்த நபர் அலறியுள்ளார் இதையடுத்து கார் ஓட்டுனர் காரை ஓரமாக நிறுத்தி உள்ளார். காரில் இருந்து தப்பித்துச் சென்ற அப்பெண் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வருவதை அறிந்த மூன்று நபர்கள் காரை எடுத்துக்கொண்டு தப்பித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது செல்போனை காரிலேயே விட்டு விட்டு ஓடி வந்துள்ளார்

இதையடுத்து போலீசார் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அதை அந்த கார் ஓட்டுனர் எடுத்து பேசியுள்ளார். இதையடுத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மற்றும் நாக்கை துண்டித்த நபர் மருத்துவமனையில்

சிகிச்சைக்காக சென்ற போது அவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றும் அந்த இளம்பெண்ணின் தைரியமான செயலை போலீசார் பாராட்டி உள்ளனர்.