யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்துமுடிந்த மஹத்தின் திருமணம்..!! புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் சிம்பு..!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் மஹத். இவர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் அறிமுகமானார்.பிறகு காலை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.ஆனால் இவர் பிரபலமானது தல அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மூலம்தான்.

பின்பு தளபதி நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் ஒரு இடம்பிடித்தார்.பிறகு பெரிதாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து மஹத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கினார்.குறிபபிக இதே நிகழ்ச்சியில் இவருடன் போட்டியாளராக இருந்த யாஷிகாவுடன் பலவிதமாக கிசுகிசுக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இருவரும் காதலிப்பது போல தெரிந்தது.

அனால் அவர் ஏற்கனவே பிரச்சி என்பவரை காதலித்து வந்தார்.இருப்பினும் இருவரும் நண்பர்களாக பழகிவந்தனர்.தற்போது ஒரு படத்தில் கூட நடித்து வருகின்றனர். இந்தநிலையில் ஏற்கனவே மஹத்துக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.ஓராண்டுக்கு மேலான நிலையில் தற்போது ஜனவரி 30ஆம் தேதி மிக எளிமையாக இவர்களது திருமணம் நடந்துள்ளது.தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.