தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில் நடிகைகளை கௌரவகிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் JFW திரைப்பட விருதுகள் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவில், பல்வேறு பட்டியலின் கீழ் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நடிகை ஜோதிகாவுக்கு, பெண்களை மையப்படுத்தி எடுக்கட்ட ‘ராட்சசி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 90 களின், இடுப்பழகி நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார்.

இந்த விருது விழாவில், நடிகை ஜோதிகாவிடம் சிலம்பம் சுத்த சொல்லி அனைவரும் கோரிக்கை வைக்க, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜோதிகா, மேடையில் அனைவர் முன்பும் சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இது குறித்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
THE REAL SHERO: #Jyothika does the Silambaattam terrifically! #jfwmovieawards2020 pic.twitter.com/jA5jvcTSLc
— JFW (@jfwmagofficial) March 14, 2020