தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தம்பதியனராக இருப்பவர் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா.திரையுலகில் ஜோடிகள் என பலர் இருந்தாலும் குறிப்பாக சினேகா பிரசன்ன அஜித் சாலினி என பலர் இருந்தாலும் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு தனி இடம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.விஜய் மற்றும் சங்கீதாவின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது.விஜயின் ரசிகையாக சங்கீதா விஜய் மேல் காதல் கொண்டு திருமணம் முடித்தார்.1999 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது.என்னதான் பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்து வந்தாலும் விஜயின் ஆரம்ப காலங்கள் பல தோல்வியை சந்தித்தே கிடைத்தது. இவருக்கு முதல்முறையா ஹிட்டடித்த திரைப்படம் பூவே உனக்காக.இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயின் மாஸ் எங்கேயோ போனது.இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு தலைசிறந்த நடிகராக வலம்வருகிறார்.

சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் பெற்றோர், விஜய்யின் தீவிர ரசிகரான மகேஷ் வீட்டிற்குச் சென்றதும், அங்கு சமையலறையில் விஜய்யின் அம்மா சமையல் செய்த காட்சியும் வெளியானது. கடந்த 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ஓபனிங் பாடலான “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார்.வெளிநாட்டில் படித்து வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் எடுத்த குறும்படங்கள் தளபதி ரசிகர்களால் தமிழ்நாட்டிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.வேட்டி சட்டையில் தேசிய கொடியுடன் குடியரசு தினம் கொண்டாடியுள்ள ஜேசன் சஞ்சய்யின் புகைப்படத்தை பகிர்ந்து, இளைய தளபதி என தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.