நடிகை சனம் ஷெட்டி, நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் இவர் தான் வெற்றியாளர் என்று கருதிய இலங்கை நாட்டை சேர்ந்த தர்ஷன் என்பவரை இவர் காதலிப்பதாக செய்தார்கள் வெளிவந்தது. மேலும் தர்ஷனை காதலித்து வருவதாக சனம் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்தநிலையில் தற்போது தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பிக் பாஸ் தர்சனின் மீது புகார் அளித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தன்னை காதலித்து வந்ததாகவும் இது நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் முடிவாகும் நிலையில் எல்லாம் முடித்துவிட்டு தற்போது தன்னை திருமணம் செய்யமுடியாது என கூறுகிறார் எனவும் புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் தர்ஷன் கொடுத்த பேட்டியில் தனது பக்கத்தில் இருக்கும் நியாயத்தினைக் கூறினார். இந்நிலையில் தர்ஷன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்த சனம், தர்ஷன் அளித்த பேட்டிக்கு சரமாரியாக பதிலளித்துள்ளார். இரண்டரை வருடம் மனைவியாக இருந்ததாகவும், அவர் பிரஷ் மீட்டிற்கு அணிந்து வந்த சட்டை கூட நான் வாங்கிக்கொடுத்தது தான் என்று பல உண்மைகளைக் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தர்ஷன், தற்போது காதல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றார்.