விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சின்ன திரையில் ரவுடி பேபி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இவர் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர் தனது காதலர் குறித்து முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.