அடடே காமெடி நடிகர் வையாபுரியின் பிள்ளைகளா இது?…. ஆளே அடையாளம் தெரியாம வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வையாபுரி. இவர் சின்ன மருது பெரிய மருது,மால்குடி டேஸ் என்ற தொடர்களின் முதல் முதலாக நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான செல்லக்கண்ணு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

பின்னர் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வையாபுரி தனது குடும்பத்தினருடன் பல வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் வையாபுரியின் மகன் மற்றும் மகளா இது என ஆச்சரியத்துடன் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.