“வயித்துல ஒரு பன்ச்”…. தந்தையுடன் குஸ்தி விளையாடிய கௌதம் கார்த்திக்…. இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

இவரின் மகன் கௌதம் கார்த்திக் கடல், வை ராஜா வை,இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கௌதம் கார்த்திக் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gautham Karthik இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gauthamramkarthik)

 

இந்நிலையில் தற்போது தனது தந்தையும் நடிகருமான கார்த்திக் உடன் குத்துச்சண்டை விளையாடும் ஒரு வீடியோவை கௌதம் கார்த்திக் இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என் தந்தையே நண்பராக இருப்பது தான் . எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் அவர் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார் என்று நெகிழ்ச்சியுடன் கௌதம் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.