ராதிகா அம்மா இல்லை என்று சொன்னாலும் வரலட்சுமி சொன்ன கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்த ராதிகா சரத்குமார்….!

பிரபல திரைப்பட நடிகை ராதிகா, இவர் 90 களில் இருந்து நடித்து வருகிறார். கமல், ரஜினி போன்றோரோடு இவர் நடித்த படங்கள் நிறைய உள்ளன. பெரிய திரையிலும், சின்ன திரையிலும் கொடி கட்டி பறப்பவர் இவர் தான். முதல் முதலில் தமிழ் மக்களை சித்தி எனும் சீரியலில் கட்டி போட்டார்.

இவர் தற்போது படங்களில் அம்மா வேடம் இட்டு நடித்து வருகிறார். இவர் எப்போதும் மிகவும் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிடுவார். எந்த ஒரு நேர்காணலின் போதும் நேர்மையான கருத்துக்களை வெளியிட்டுவருவார். இவருக்கு ஏற்கனவே இரு முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாரின் முதல் மனைவி மகள் தான் வரலட்சுமி.

இவர் ராதிகா எனக்கு அம்மா கிடையாது, அவரை நான் ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். மேலும் அந்த பேட்டியில் எனக்கும் சினிமா துறையில் நிறைய பாலியல் தொந்தரவுகள் வந்துள்ளது. ஆனால் எதற்கும் நான் சம்மதிக்கவில்லை என கூறினார். இந்நிலையில் இது குறித்து ராதிகா தனது இணைய பக்கத்தில் நன்றாக “துணிந்து சொன்னாய் வரு..நிறைய சக்திகள் உன்னுள் இருக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.