நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா யோகாசனம் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.