நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தான் படவாய்ப்பிற்காக தொல்லைகளுக்கு ஆளானதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி கம்பீரமான கதாபத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இவர் போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். பின்னர் ண்டகோழி 2, சர்கார் படங்களில் வில்லியாக புதிய அவதாரம் எடுத்த வரலெக்ஷிமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தானும் சினிமாவில் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளேன். நான் ஒரு சினிமா பிரபலத்தின் மகள் என தெரிந்தும் கூட என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என தெரிவித்தார். “மேலும் பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தவறான முறையில் என்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கேட்டனர். ஆனால் அப்படியொரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என நான் மறுத்துவிட்டேன்.

மேலும் என்னிடம் பேசியவர்களின் கால் ரெகார்டிங் ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. மேலும் பெண்கள் ஒத்துக்கொண்டு எல்லாம் நடந்து முடிந்த பிறகு மீது புகார் தெரிவிப்பது ஏற்கமுடியாதது. எனக்கு அப்படியொரு வாய்ப்பு தேவையில்லை” என வரலட்சுமி தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரலட்சுமியின் இந்த தைரியமான பதிலை பாராட்டியுள்ளார். அதில் “சரியாக சொன்னாய் வரு… நீ இன்னும் வலிமை பெற வேண்டும்” என்று பாராட்டி பதிவிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக நடிகை வரலட்சுமி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தேயக பேட்டியில் தெரிவித்துள்ளார்.@varusarath
விவரம்: https://t.co/1VxvhkdFLP pic.twitter.com/D9VGL3FMCg
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 29, 2020