முதலில் சின்ன திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா,சன் தொலைகாட்சியில் வம்சம் சீரியலில் நடித்தார்.பிறகு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அந்த திரைப்படத்தில் நடிக்க சின்ன திரையை விட்டு பெரிய திரைக்கு தாவினார்.அவர் நடித்த முதல் திரைப்படமான வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்ட்டர் மிகவும் பிரபலம் அடைந்தது.இந்த திரைப்படத்தில் சூரி உடன் செய்யும் காமெடி மக்களிடையே இன்னும் மறக்காத காமெடி மருந்தாக உள்ளது.

வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவரை பிரபலம் அடைய வைத்ததும்,மீண்டும் ஒரு மிக பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பேருடன் ஒருவராக பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலமே பலருக்கு இவரின் வாழ்க்கை கஷ்டங்கள் தெரியவந்தது.இவரின் வாழ்க்கை காதல் மிகவும் கவலை அளிக்கும்படியாக இருந்தது.இவருக்கு நடந்த சம்பவங்களை கேட்டு அழுகை வராதோர் யாரும் இருக்க முடியாது.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படத்தில் சிகரெட் இருப்பதை கவனித்த நெட்டிசன்கள் “தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் இது எப்படி வந்தது ? எதுக்கு சிகரெட் பாக்கெட்? என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
View this post on Instagram