சற்று முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி..!! மே 18 முதல் மீண்டும் ஊரடங்கு..? ஆனா அதுல தான் இருக்கு ஒரு ட்விஸ்ட்..!!

மார்ச் 25 முதல் மூன்று கட்டமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 3ம் கட்ட ஊரடங்கின் இறுதி வாரத்தில் நாம் இருக்கிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே இன்று முதல் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து வகை கடைகளும் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் மூன்றாம் கட்டத்துடன் ஊரடங்கு முடித்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை இந்த மாத இறுதி வரை அனுமதிக்க கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

இதே போல் மராட்டியம், குஜராத், தெலுங்கானா மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளன. அதே சமயம் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்கலாம் ஆனால் அனைத்து பகுதிகளிலும் அதனை தொடர முடியாது என்று கருத்து தெரிவித்ததாக கூறுகிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதித்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை தொடர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஒரு மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருந்தாலும் அங்குள்ள தாலுக்காக்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அங்கு கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் பொதுப்போக்குவரத்தை பொறுத்தவரை ரயில், விமானங்களுடன் பேருந்து சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை போன்ற நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் இந்த மாத இறுதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தினாலும் கூட தமிழக அரசு சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கை தொடரும் என்றே தெரிகிறது.