தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் லைலா. இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் குழந்தை என இருந்து வந்த லைலா தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலான பிரபல நடிகைகளும் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நிலையில் லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் லைலா நடித்து வருகின்றார்.

அவரின் இரண்டாம் இன்னிங்ஸின் முதல் படமாக சர்தார் இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ராக்ஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் நடித்து வரும் நிலையில் கார்த்தி இளம் போலீஸ் அதிகாரியாகவும் வயதான தோற்றத்திலும் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். ஸ்பை த்ரில்லராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.

அதே சமயம் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.எனவே இந்த திரைப்படத்தில் 16 வருடங்களுக்குப் பிறகு லைலா மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லைலா தொடர்ந்து நடிப்பது குறித்து முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது.