அம்மாடியோ ஒரு பேக் மட்டும் இத்தனை லட்சமா?….. ஏர்போர்ட்டுக்கு கீர்த்தி சுரேஷ் மாட்டி வந்த பேக்…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் பலரும். அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் வரக் கூடிய ஒரு பேக்கை மாற்றிக் கொண்டு கீர்த்தி சுரேஷ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் அனைத்து கண்களும் அவரின் பேக் மீது தான் இருந்தது.

இந்த பேக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என சொல்லப்படுகிறது.அது மட்டுமல்லாமல் அதனை தோளில் மாட்ட வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஸ்ராப் வாங்க வேண்டும். அது மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.ஆக மொத்தம் கீர்த்தி சுரேஷ் மாட்டிக் கொண்டிருக்கும் பேக்கின் மொத்த விலை 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மொத்தம் நான்கு லட்சம் ரூபாயை என வாயை பிளந்து கமண்ட் செய்து வருகிறார்கள்.