தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் கொடிகட்டி பறந்தார். இவரை மைக் மோகன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். இவர் இன்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே தற்போது இவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழர்கள் இந்துவாக காட்டப்பட்டதாக வெற்றிமாறன் கருத்தை வைத்தார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய மோகன், உங்க கேள்வி நல்லா தான் இருக்கு, ஆனா இதை எதுக்கு இங்க பேசணும் தனியா வாங்க பேசுவோம், எதுக்கு இதை இங்க பேசுறீங்க என கோபத்துடன் கூறினார். அது மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. நான் அனைத்து மதத்தையும் அனுசரிச்சு போவேன். ஒரு மதத்திற்கும் விரோதமாக நான் நடித்தது கிடையாது என கூறினார். இந்நிலையில் அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
