சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா?…. அதுவும் எதற்காக தெரியுமா?…. புதிய குண்டை வீசிய பயில்வான் ரங்கநாதன்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிபடுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இதனிடையே திருமணத்திற்கு பிறகு காதல் கணவர் பிறந்த நாளை மாமியார் மற்றும் நாத்தனார் போன்ற குடும்ப உறவினர்களுடன் துபாயில் கொண்டாடினார் நயன்தாரா.

இதனிடையே விரைவில் சினிமா துறையில் இருந்து முழுமையாக விலகி குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து பேசி உள்ளார். நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் நடிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து நயன்தாரா மருத்துவரை அணுகியதாகவும்,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுமார் 9 மாதங்கள் ஓய்வில் மருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து சிகிச்சை பெறவேண்டும் என கூறியுள்ளதாக புதிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய கழுத்தில் இருக்கும் தாலியை எக்காரணத்தை கொண்டும் கலட்ட மாட்டேன் என்ற நிபந்தனையுடன் படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார்.எனவே நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து மருத்துவரை அணுகியுள்ளதால் விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.