வெளிநாட்டு பயணம் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்…. அதுவும் எந்த நாடு தெரியுமா?…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஹங்கேரி நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.