ஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் அந்த புடவைகள்…. என்ன காரணம் தெரியுமா?…. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே ஆட்டி படைத்தவர்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்த நிலையில் இன்றும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே போனி கபூரை திருமணம் செய்து கொண்டே சினிமாவில் இருந்து விலகிய ஸ்ரீதேவி பல வருடங்களுக்கு பின்பு அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே அந்த திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய சேவைகள் தற்போது ஏலம் விடப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கௌரி சிண்டே அறிவித்துள்ளார். மேலும் இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து பணத்தையும் ஏழை சிறுமிகளின் படிப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்