விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.தனிடையே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் நேற்று இரவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். அந்த எபிசோடு இன்று மாலை தான் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இருந்தாலும் அதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் முழுவதும் லீக் ஆகிவிட்டது.

அதன்படி இந்த முறை 10 பெண் போட்டியாளர்கள் மற்றும் 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இதனை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
தன் அண்ணனுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு, ரொம்ப எமோஷனல் ஆகவும் இருக்கு,என் அண்ணன் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளான். அவரை நான் புஜ்ஜின்னு தான் கூப்பிடுவேன். எனக்கு எல்லா சொந்தமும் அவன் தான் என பதிவிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.